இந்தியாவின் வடகிழக்கு அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் இதனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்திச் சேவையின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 23 இல் 2,265 கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுமுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அசாமில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக விளங்கும் காசிரங்கா பூங்காவில் 11 ஒரு கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட 113 காட்டு விலங்குகள் இறந்ததாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.