சீனாவின் தென்மேற்கு நகரமான செங்டுவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் கொடி திங்கள்கிழமை அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பீஜிங்கின் ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்ற அமெரிக்க உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக சீனா செங்டு நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

இந் நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாண தலைநகரான செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் கொடிகள் மற்றும் இலட்சினைகள் அந்  நாட்டு நேரப்படி திங்கட்கிழமை காலை 6.18 மணிக்கு அகற்றப்பட்டுள்ளது.

அத்துடன் செங்டுவிலிருந்து அமெரிக்கர்கள் புறப்படுவதற்கான காலக்கெடும் இன்று காலை காலை 10 மணி (02:00 GMT) வரை கொடுக்கப்பட்டுள்ளதாக ரொட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் அமெரிக்கர்கள் செங்டுவிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட 72 மணி நேரம் கால  அவகாசம் வழங்கப்பட்டது.

தூதரகம் மூடல் என்பது இரு நாடுகளுக்கிடையேயான மோசமடைந்துவரும் உறவுகளின் கூர்மையான விரிவாக்கமாகும், ஏற்கனவே வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், கோவிட் -19 தொற்றுநோய், தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் ஹொங்கொங்கில் சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.