சட்டத்தில் திருத்தம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை -  பிமல் ரத்னாயக்க

26 Jul, 2020 | 07:49 PM
image

(எம்.மனோசித்ரா)

தொல் பொருள் சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்திற்கு மாத்திரமே அதனை செய்ய முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் நீதித்துறையை நிறைவேற்றுத்துறையினால் சிறைப்படுத்துவதற்கு முற்படுகின்ற இந்த அரசாங்கம் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றது என்றும் பிமல் ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி 8 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் பிரச்சினைகள் பற்றி இவர்களின் அசமந்த போக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை விபசார விடுதி போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். தொல்பொருள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி முயற்சிக்கின்றார். 

எனினும் அவ்வாறு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது. பாராளுமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது. பொலிஸ் மற்றும் நீதித்துறையை நிறைவேற்றுத்துறையினால் சிறைப்படுத்துவதற்கு முற்படுகின்றனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள் சூழலை பெருமளவு சீரழித்துள்ளது. மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டமை இதற்கான சிறந்த உதாரணமாகும். 

அதனால் எந்தளவு பாரதூரமான பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது சூழலியலாளர்கள் மாத்திரம் அறிந்த விடயமாகும். எனினும் இது போன்ற தீர்மானங்களை எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்று நீதிமன்றம் அறிவித்தது. 

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சூழலியலாளர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கொவிட்-19 நாட்டில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 600 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்கம் கூறுகிறது. வைரஸ் பரவலின் பின்னர் பலர் தொழில்களை இழந்துள்ளனர். பொருளாதார ரீதியில் பாரதூமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே வேளை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுண்கடன் பெற்ற பலர் தற்போது பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இது உலகலாவிய ரீதியில் காணப்படும் பிரச்சினையாகும். உலகலாவிய ரீதியில் இலட்சக்கணக்கானோர் இதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இலங்கையில் சுமார் 100 இலட்சம் கிராமிய மக்கள் நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைத்து நுண்கடன் பெற்றவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதாகக் கூறியே கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 தற்போது அதுபற்றி கருத்துக்களை கூட அவர் கூறவில்லை. இதனால் எமது நாட்டிலுள்ள பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் விசுவாசிகளுக்கு நூற்றுக்கு 4 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டது. எவ்வித தகுதியும் அற்ற சிலருக்கு 100 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையிலான தீர்மானங்கள் அரசாங்கத்திடம் உள்ளன.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. முதியோர் பற்றி எந்த பேச்சும் கிடையாது. நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருமே முதியவர்கள் தான். அவ்வாறிருக்கையில் முதியோர் பற்றி உணர்வு எங்கே ? முதியோருக்கான நிலையான வைப்பு வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

தேர்தலுக்காகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமைக்காகவும் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அரசாங்கம் மீண்டும் இந்த வட்டியைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும். அதற்கான சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எவ்வித நிவாரணமும் இல்லை. சுகாதாரத்துறையின் பரிந்துரைகளை அடுத்து நாட்டின் அனைத்து துறைகளும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கிடையில் மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 5 இலட்சம் பேருடைய வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 40 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளவர்கள் அந்நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு முன்னாள் சென்று தம்மை தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோருகின்றனர். 

ஆனால் அரசாங்கம் தமக்கு தேவையானவர்களையும் உறவினர்களை மாத்திரம் நாட்டுக்கு அழைத்து வருகின்றது. மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள் பலருக்கு தற்போது தொழில் அற்றுப்போயுள்ளது. இதனால் நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் இது பற்றி எந்த கருத்தையும் கூறவில்லை.

ஆனால் அனைத்தையும் மறந்து ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை தக்க வைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றனர். இம்முறை தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

அனைத்து அதிகாரங்களையும் தங்கள் வசப்பத்திக் கொள்வதற்கான திட்டமே இதுவாகும். நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பிற்கு முக்கியத்துவமளிக்கப்படும் என்று கூறினாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் ஆளுங்கட்சியுடனேயே இருக்கின்றனர். 

பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் தொடர்புபடுகின்றனர். இவ்வாறானவர்களை பாதுகாப்பதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36