(எம்.மனோசித்ரா)

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்று உள்ளாகியவர்களுடன் தொடர்புகளைப் பேணி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம் -  Newsfirst

அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2772 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2106 பேர் குணமடைந்துள்ளதோடு 655 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளர் மீண்டும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவரும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். 

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் மூலம் சமூகத்தில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.