விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கிய தமிழ்மக்கள் அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாககூடாது. என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை மௌனிக்க செய்வதற்காகவே வன்னியில் அதிகம் பேர் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இந்த அபாய நிலையை உருவாக்கியது. மகிந்தவும் கோட்டாவுமே. தமிழ்கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்கான சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்க முடியும்.
இன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர். எனினும் இந்த பகுதியிலே இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து அடக்கு முறைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. அதனை கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்து வருகின்றது.
பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் எமது தேசியத்தை நசுக்கநினைக்கின்ற ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சரியான பாடத்தை நாம் புகட்டவேண்டும். இது ஒவ்வொருவரதும் கடமை. அற்ப சொற்ப சலுகைகளிற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.
விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை
உருவாக்கியவர்கள் எமது மக்கள். எமது மக்களே அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு வரமுடியாது. எனவே உங்கள் வாக்கினை எமது பூர்விகம் சிதைக்கப்படுவதற்கு பாவிக்க போகின்றோமா அல்லது எமது மண்ணை அபகரிப்பதற்கு பாவிக்க போகின்றோமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
வன்னியில் சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
சிங்களவர் வரமுடியாத வன்னி மாவட்டத்திலே வருவதற்கான வாய்ப்புக்களையும், அபாயத்தையும் இன்று பலர் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மஸ்தான் அதற்காக வாக்குகளை எடுத்து கொடுக்க போகின்றார்.
அதற்கு நாம் துணைபோக கூடாது. சிங்களவர் ஒருவர் இங்கு வெற்றி பெற்றால் அவரை நிச்சயம் அமைச்சராக ஆக்குவார்கள். இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் அபாயம் ஏற்படும். எனவே தனிப்பட்டவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பை கூட்டமைப்பின் மீது காட்ட முற்படாமல். எமது இறையாண்மையையும் பலத்தையும் காட்டுகின்ற வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்.
கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் சோதனை சாவடிகளை அமைத்தார்கள். இன்று இராணுவம் எமது வீதிகளில் சைக்கிள்களில் திரிகின்றது, புலனாய்வு பிரிவினர் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது மக்களை அடக்கு முறையுடன் கண்காணிப்பதே அவர்களது பிரதான நோக்கமாக உள்ளது. எமது இனத்தின் பிரச்சனை நியாயமானது என்பதை தென் இலங்கைக்கு நாம் சொல்ல வேண்டும்.
பட்டிணி கிடந்தாலும் தமிழர்கள் தமது இறையாண்மையை விடமாட்டார்கள் என்ற வகையில் உங்கள் வாக்குரிமையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். போராட்டத்திற்காக தன்னை அர்பணித்த இனம் தமிழினம். இந்த வன்னிமாவட்டம் எமது வரலாற்றை சுமந்திருக்கின்றது. எனவே இவர்களை தண்டிப்பதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் வரும். நாம் அதுவரை ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் இந்தியாவையும், புலம்பெயர் உறவுகளையும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எமது முன்னாள் முதலமைச்சர் அதனை செய்யவில்லை. தமிழர்களிற்கு கடமைசெய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு அதிகம் இருக்கின்றது. என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM