கொழும்பிலிருந்து பதுளைக்கு இரும்புக் கம்பிளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை 5 மணியளவில் பண்டாரவளை - கோளத்தனை பகுதியில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் லொறியின் சாரதி காயங்களுடன், ஆபத்தான நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்றுவருகின்றார். 

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.