பிலியந்தலை, கெஸ்பேவ பகுதியில் முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 27 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் அவர்களை கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 364 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6. மணி வரையான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டவர்களுள் 211 பேரும் இதற்குள் அடங்குவர்.