(ஆர்,ராம்)
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
கூட்டணியில் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான முன்னாள் நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு காலை 9.30இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு, இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச நீதிவிசாரணையைக் கோருதல், நிலைபேறான அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களை மையப்படுத்தியதாகவும் அவை தொடர்பில் கூட்டணி முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்களை மையப்படுத்தியதாகவும் தேர்தல் விஞ்ஞாபனம் காணப்படுகின்றதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத்தவறிய விடயங்கள் தொடர்பான பட்டியலொன்றையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளீர்த்துள்ளது.
இந்நிகழ்வில் கூட்டணின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், பிரதிதிகள், வடக்கு கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள், மததலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM