கொரோனா வைரஸ் தொற்று : நுரையீரலில் தழும்புகள் ஏற்பட்டும் வாய்ப்பு

26 Jul, 2020 | 09:21 AM
image

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்றவர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கும் அவர்களின் நுரையீரலில் தழும்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அது மனித உடலில் குறிப்பாக நுரையீரல் பகுதியில் நாட்பட்ட பக்கவிளைவை ஏற்படுத்துகிறது. இந்த பக்கவிளைவு தழும்பாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும், மருத்துவர்களின் கண்காணிப்பில் நுரையீரல் தொடர்பான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் நுரையீரலில் தழும்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய்க்குறி தொடக்க நிலையில் இருக்கும்போதே சிகிச்சை பெறுபவர்களுக்கு இத்தகைய தழும்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

அதே தருணத்தில் கொரோனா வைரஸ் மனித உடலில் புகுந்ததும் நுரையீரல் திசுக்கள் பகுதியில் அரிப்பை ஏற்படுத்தி, தழும்புகளை உருவாக்கி விடுகின்றன.  இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் எதிர்காலத்தில் சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மூச்சுத் திணறலும், இதய பாதிப்பும் ஏற்படும். இதனால்தான் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் சிலருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மீண்டும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றிற்கான சிகிச்சைக்குப் பிறகு கொரோனா வைரஸ் கிருமிகள் உடலில் இல்லாத நிலை இருந்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக  சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அறிகுறி இல்லை என்றாலும், நுரையீரல் தொடர்பான ஸ்கேன் பரிசோதனை செய்து, உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

-டொக்டர் அப்துல்லாஹ்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29