எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறு பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள், உண்மையிலேயே முன்பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும்.
குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை ஊட்டுவதும் அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் ஆக்குவதும் முன்பள்ளி ஆசிரியர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க மிகுந்த பொறுமையும் அவசியமாகும் . இவ்வாறான பின்னணியில் கல்வி போதிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு மாதாந்த வேதனம் கிடைப்பதில்லை. அவ்வாறு வேதனம் கிடைத்தாலும் ஒரு சிறு தொகையே வழங்கப்படுகின்றது.
மேலும் பலர் வேதனமே இன்றி வருடக்கணக்கில் சேவை அடிப்படையில் கல்வி போதித்து வருகின்றனர். இவர்களுக்கும் அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்ற போதிலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை .
இந்நிலையில் இதனையோர் அரசாங்க சேவையாகக் கருதி, முன்பள்ளி ஆசிரியர்களின் தரங்களை பரிசீலித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, உரிய வேதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது .
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராயக் கல்வி, ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் இதனை முக்கிய விடயமாகக் கருதி , முன்பள்ளி பாடசாலை முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உண்மையில் அவ்வாறு நடைபெறுமானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே அமையும் , தொட்டில் பழக்கமே சுடுகாடு வரை என்பது போன்று, குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் பழக்கவழக்கங்களையும் சிறுபராயத்திலேயே ஊட்டுவது இன்றியமையாதது. இந்தப் பின்னணியில் முன்பள்ளி ஆசிரியர்களின் பணி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM