ஒகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாள் இன்றாகும்.

இதுவரை 80 சதவீத வாக்களார் அட்டைகள் குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்காளர் அட்டைகளை ஜூலை 29 ஆம் திகதிக்குள் விநியோகித்து முடிக்கவும் தபால் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. குறித்த காலப் பகுதியில் வாக்களார்கள் தமக்கான வாக்காளர் அட்டைகளை பெறவில்லை எனெனில், அருகில் உள்ள தபால் நிலையத்தில் முறையிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.