மதீனா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சவுதி அரேபியப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தற்கொலை குண்டுதாரி 26 வயதான ஒரு சவுதி பிரஜை என்றும் அவர் போதைமருந்தை அதிகம் பயன்படுத்தும் பழக்கத்தையுடையவரெனவும் அவரை குறித்த சம்பவத்துடன் ஏற்கனவே கைதுசெய்துள்ளதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதீனாவிலுள்ள முகமது நபி மசூதிக்கு அருகே இருந்த கார் நிறுத்துமிடத்தைக் கடந்து வந்து தான் கட்டியிருந்த தற்கொலை குண்டை வெடிக்கச் செய்ததில் தான் சவுதிப் படையினர்  உயிரிழந்துள்ளனர்.

மதினாவில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நாளில் சவுதி நகரான கத்திஃப்பில் இரு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறித்த சம்பவங்கள் தொடர்பாக மூன்று வெளிநாட்டுப்பிரஜைகளை சவுதி அதிகாரிகள் அந்தக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியர்வகள் என்று கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது . ரமழான் மாத நோன்புகாலத்தின் இறுதிப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.