ஐ.பி.எல்.வீரர்களுக்கு பரிசோதனை நடத்துமாறு வலியுறுத்தும் நெஸ் வாடியா

25 Jul, 2020 | 05:16 PM
image

ஐ.பி.எல். வீரர்களுக்கு  நாள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற, களத்திலும் களத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும். பாதுகாப்பு விடயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. 

முடிந்த அளவுக்கு அதிக அளவிலும், நாள்தோறும் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

நான் கிரிக்கெட் வீரராக இருந்தால் நாள்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதனால் எந்த தீங்கும் வராது. உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறை என்பது மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும். 

அதனை 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டியில் அமுல்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை. இந்த தொடரில் அணிகள் நிலையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின்  (பி.சி.சி.ஐ)அறிவுறுத்தலை எதிர்நோக்கியுள்ளோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதற்குரிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அவர்களிடம் உள்ளது. போதுமான பரிசோதனைகள் செய்ய உள்ளூர் அரசாங்கத்தின் உதவி பி.சி.சி.ஐ க்கு தேவைப்படும். இதற்கு முன்பாக நாம் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தி இருந்தாலும், இந்த முறை நாம் நிறைய நடைமுறைகளை கூடுதலாக பின்பற்ற வேண்டியுள்ளது.

இந்த பருவக்காலத்தில் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் முன்பை விட அதிகமானோர் பார்த்து ரசிக்கும் போட்டியாக ஐ.பி.எல். இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நிலையை எட்டவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன்.

அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் அனுசரணையானர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் அணிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பி.சி.சி.ஐ ஈடுகட்டும் என்று நம்புகிறேன்” என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56