துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகமான ஹாகியா சோபியாவை மீண்டும் ஒரு மசூதியாக மாற்றி தொழுகைக்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

ஹாகியா சோபியா வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திறக்கப்பட்டதால் இஸ்தான்புல் மக்கள் திரண்டனர். 

வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த மதகுருக்கள் குர் ஆனை ஓதினர். இயேசு மற்றும் மரியாவின் மோசைஸ் ஆகியோரின் ஓவியங்கள் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன.

1,500 ஆண்டுகள் பழமையான குறித்த அருங்காட்சியகம், யுனெஸ்கோவினால் கடந்த 1934 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதம் துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை ரத்து செய்தது, ஒரு மசூதியைத் தவிர வேறு எந்தப் பயன்பாடும் "சட்டப்படி சாத்தியமில்லை" என்று கூறியது.

இதை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இந்த தீர்ப்பிற்கு பதிலளித்தார், ஜூலை 24 முதல் உலகப் புகழ்பெற்ற தலம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திறக்கப்படுவதாக அறிவித்தார். தொழுகைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது அவரும் கலந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாகியா சோபியாவிற்குள்ளே பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் சுமார் 1,000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் பிரார்த்தனைகளை வெளியே நிறைவுசெய்துள்ளனர்.

ஒரு தொடக்க விழாவைத் தொடர்ந்து ஒரு முறையான பிரார்த்தனை சேவை நடவடிக்கைகள் ஒரு பெரிய திரையில் வெளியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.