காணாமல் ஆக்கப்பட்ட தேவராஜா சர்மாவின் பெற்றோரால் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

24 Jul, 2020 | 09:39 PM
image

காணாமல் ஆக்கப்பட்ட தேவராஜா சர்மாவினுடைய பெற்றோரால் நஷ்ட ஈடு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

ஜெகதீஸ்வரசர்மா மற்றும் ஜெசியம்மா ஜெகதீஸ்வரசர்மா குருக்களினால் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிகேள் எழுத்தாணை மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டாளர்களின் வழக்கை கொண்டு நடாத்த அனுமதி அளித்ததுடன் 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வின் மூலம் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ சுற்றிவளைப்பின் போது கடத்தப்பட்டு காணாமல் போன தேவராஜ சர்மாவினுடைய பெற்றோரான மனுதாரர்கள் தம்முடைய மகன் கடத்தப்பட்டு காணாமல்போன விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அமைந்துள்ள ஜெனீவா மனித உரிமைகள் குழுவிற்கு இக்குறித்த முறைப்பாட்டை செய்திருந்தனர்.

இக்குறித்த முறைப்பாட்டை விளங்கிய ஜெனிவா மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கமானது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் 6, 7, 9 மற்றும் 10 ஆம் உறுப்புரைகளை மீறியுள்ளதாக கூறியுள்ளதுடன் இவ் மனுதாரர்கள் இக்குறித்த குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 7 இன் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்தினால் நஷ்டஈடு பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனவும் தனது கருத்தை வழங்கியிருந்தது. இக்குறித்த பரிந்துரைகளுக்கு பதிலளித்த இலங்கை அரசாங்கமானது தனது எழுத்து மூலமான சமர்ப்பணத்தில் குறித்த காணமல் போன தேவராஜ சர்மாவை கடத்திய இராணுவ வீர்களுக்கு எதிராக விசாரணை மற்றும் தகுந்த சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட தேவராஜ சர்மாவினுடைய பெற்றோரான மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்திருந்தது. குறித்த நஷ்டஈடு வழங்கப்படும் விடயத்தை கணிப்பதற்கு இலங்கை அரசாங்மானது குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்திருந்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது இவ்விடயத்தை நன்கு ஆராய்ந்த பின்னர் மனுதாரர்களுக்கு ரூபா 3,888,000 நஷ்டஈடாக இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என சிபாரிசு செய்திருந்தது.

குறித்த மனுதாரர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கணிக்கப்பட்ட நஷ்டஈட்டை வழங்குமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை அரசாங்கம் வழங்காமையினால் மேற்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிகேள் எழுத்தாணை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா என்ற வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சிசிர டீ ஆபுறு, நீதியரசர் பத்மன் சூறசேன மற்றும் நீதியரசர் அமரசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சமூக சிற்பிகள் நிறுவன அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி க.கனகீஸ்வரன் மற்றும் சட்டத்தரணிகளான ஜெ. லக்ஷ்மணன் மற்றும் ம.யூட்டினேஷ் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன் மேன்முறையீட்டாளர்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளினாலும் அதன் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு நஷ்டஈட்டை பெற்றுத்தருவதற்கான அனைத்தும் நடவடிக்கைகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மூலம் நெறிப்படுத்தியதாலும் மனுதாரர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்ற சட்ட பூர்வமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் எனவே மேன்முறையீட்டாளர்கள் குறித்த நஷ்டஈட்டை பெறுவதற்கு உரித்துடையவர்கள் என வாதிடப்பட்டது.

திறைசேரி செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜராகிய மேலதிக மன்றாடியார் தலைமை அதிபதி நெரின் புள்ளே அவர்கள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசா வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இலங்கை அரசானது குறித்த குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் முதலாம் விருப்புரிமை ஆவணத்தில் கைச்சாத்திட்டமை இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என தீர்க்கப்பட்டுள்ளமையால் குறித்த வழக்கு அடிப்படையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர் ஆனால் நல்லரட்ணம் சிங்கராசா வழக்கின் நிகழ்வுகளுக்கும் சர்மா வழக்கின் நிகழ்வுகளுக்கும் பூரண முரண்பாடு காணப்படுவதனால் குறித்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இவ்விண்ணப்பதாரிகளின் நஷ்டஈடு பெறும் உரிமையை தடுக்கமுடியாது என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த வழக்கில் நல்லரட்ணம் சிங்கராசாவின் வழக்கை அரசதரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் காரணம் காட்டுவதினால் அவ்வழக்கு 5 நீதியரசர் கொண்ட முழு அமர்வின் முன்னிலையில் தீர்க்கப்படடுள்ளமையினாலும் இவ் வழக்கையும் 5 நீதியரசர் கொண்ட முழு அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவு இட்ட நீதிமன்றம் வழக்கை 09/02/2021 அன்று இறுதி விசாரணைக்காக நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02