தப்பிச்சென்ற கொரோனா தொற்றுடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டார் !

Published By: Vishnu

24 Jul, 2020 | 02:04 PM
image

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் மற்றும்  இராணுவ குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையாகிய நிலையில் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றுடைய நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக இன்றுகாலை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியிருந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையாகிய நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த கைதியொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

திருகோணமலை சீனன்குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட்  ஹசிம் முகமட் நசீம் என்பவரே அங்கொட வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21