வைத்தியசாலையில் இருந்து தப்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி - பொலிஸ்

24 Jul, 2020 | 10:33 AM
image

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையாகிய நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த கைதி  திருகோணமலை சீனன்குடா, மாபிள் பீச் ரோட்டைச் சேர்ந்த முகமட்  ஹசிம் முகமட் நசீம் என்பவரே அங்கொட வைத்தியசாலையில் இருந்து இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது அவரது கால் முடங்கிப்போயுள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரை அடையாளம் கண்டால் 0718591017, 0718592290, 0718591864 அல்லது 119 என்ற  தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தப்பிச்சென்றவரின் ஒளிபடத்தையும் அவர்தொடர்பான விபரங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21