சீனாவின் வெளியுறவு அமைச்சகம் செங்டு நகரில் அமைந்துள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட வேண்டும் என்ற வொஷிங்டனின் முடிவுக்கு பதிலடியாக பீஜிங் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் ட்ரம்ப், ஹூஸ்டனில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு பீஜிங்கிற்கு 72 மணிநேர அவகாசம் அளித்திருந்தார்.

இந் நிலையில் சீனாவின் இந்த பதிலடியானது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசாலை ஏற்படுத்தியுள்ளது.