சர்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸாரால் இடையூறுகள் ஏற்படுத்தபட்டுள்ளன.
இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும், ஊர் மக்கள் இணைந்து, குறித்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளில் (23.07) இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குறித்த இடத்திற்கு அதிகளவான ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் சென்றுள்ளனர்.
அத்தோடு அங்கு சென்ற பொலிஸார் கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக்கூடா தெனத் தடைவிதித்திருந்தனர்.
இந் நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் கோவிலில் இடம்பெறவுள்ள வருடாந்த பொங்கல் விழா தொடர்பில் பொலிஸாருக்கு நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும் பொலிஸார் கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக் கூடாதெனத் தொடர்ந்தும் கோவில் நிர்வாகத்தினரைத் தடுத்தனர்.
இந் நிலையில் பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியிலும் கோவில் நிர்வாகதினர் பந்தல் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்தும் பொலிஸார் பந்தல் அமைப்பதற்கு தடை விதித்த நிலையில் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆகியோர், தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அவ் அறிவித்தலை எழுத்துமூலம் தருமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.
குறித்த நீராவியடிப் பிள்ளையார் கோவில்ச் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்குவின் தூண்டுதலிலேதான் பொலிஸார் தம்மை கோவில் சூழலில் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்ததாகவும், பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாகவும் கோவில் நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.
அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தாம் நடந்துகொள்ளவில்லை எனவும், நாளை இடம்பெறவிருக்கின்ற பொங்கல் நிகழ்விற்காகத் தற்காலிகமாகவே தாம் தகரப்பந்தல் அமைத்ததாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் கோவில் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்கு, நீதிமன்றத் தீர்ப்பினை மீறி கோவில் சூழலில் நீர்த்தாங்கி ஒன்றினை நிர்மானித்துள்ளதுடன், அங்கு பௌத்தக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளதாகவும், ஆகவே நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு செய்யும் செயற்பாடுகளுக்காக தாம் விரைவில் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM