பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் புரட்சிக்கு தயார் - தெற்கு மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

Published By: Digital Desk 4

23 Jul, 2020 | 06:14 PM
image

பொருளாதார, சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பாரிய சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் புரட்சி ஒன்றுக்கு தெற்கு தயாராகவுள்ளது என காலி மாவட்ட மக்கள் உறுதியளித்துள்ளனர். 

கடந்த ஐந்து வருட கால வீழ்ச்சியினை தாம் சரியாக புரிந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் எதிர்கால தலைமுறைக்காக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் இம்முறை தேர்தல் தீர்க்கமானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (23) காலி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த மக்கள் இதனைத் தெரிவித்தனர். 

காலி ஹினிதும தொகுதியில் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி அபேட்சகர் சம்பத் அத்துகோரல நெலுவ பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றினார். 

நெலுவ தேசிய பாடசாலைக்கு சென்ற அவர், அதன் குறைபாடுகளை கேட்டறிந்தார். பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை பெற்றுத் தந்தால் ஜனாதிபதி எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென சிறிய ஏற்றுமதி பயிர்ச் செய்கையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். 

மதுவரி அதிகாரிகளின் சுற்றி வளைப்புகள் காரணமாக கைவிடப்பட்டுள்ள கித்துல் கைத்தொழிலை மீண்டும் கட்டியெழுப்பும் சூழலை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்க வேண்டியதன் தேவை குறித்து கலந்துரையாடப்பட்டது. முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் பல இடங்களில் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

09 வயதுடைய சிறு பிள்ளையொன்று தான் சேகரித்த உண்டியல் பணத்தை கொவிட் நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் இதன்போது அன்பளிப்பு செய்தது.  

அபேட்சகர் இசுறு தொடங்கொட வந்துரம்ப பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் தேயிலை செய்கையாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டது.

அறநெறிப் பாடசாலைகளின் பாட விதானத்தில் உள்ள சில பகுதிகளை பாடசாலை பாட விதானத்திற்குட்படுத்தி பிள்ளைகளை அறநெறி பாடசாலைகளை நோக்கி வழிப்படுத்த முடியுமென இச்சந்திப்புக்கு வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். தர்மாச்சாரி பரீட்சையில் சித்தி பெற்றிருப்பது அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்தனர். 

பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விசேட செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிராமிய பிரதேசங்களில் அத்தகைய செயற்பாடுகள் குறித்து பெயர் குறிப்பிடாது செயலணிக்கு தெரிவிப்பது மூலம் மக்கள் எதிர்பார்க்கும் இலக்கை விரைவாக அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

உடுகம தள வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

சங்கைக்குரிய பத்தேகம சமித்த தேரர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 

முன் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் உட்சாகத்துடன் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டுமென அபேட்சகர் கீதா குமாரசிங்க பென்தர எல்பிட்டிய கோணகல சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்துருவ பிரதேசத்தில் சுமார் 40 வீடுகளுக்கு இது வரையில் குடிநீர் கிடைக்கப்பெறாத காரணத்தினால் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அபேட்சகர் சம்பத் அத்துகோரலவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06