இந்தியாவில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கத்தை சேர்ந்தவர் ஹேமா(வயது 31). (பெயர் மாற்றப் பட்டுள்ளது)பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பண்ருட்டி யில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார்.

தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகியோர் ஹேமாவிற்கு பேஸ்புக் நண்பர்களாக அறிமுகமானார்கள்.இவர்கள் பேஸ்புக்கில் பல தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.பின்னர் கையடக்கத்தொலைபேசியின் மூலமாகவும் பேசி வந்தனர்.

கருத்து வேறுபாடு காரணமாக ஹேமா அவர்களிடம் பேசுவதை தவித்தார்.கடந்த சில மாதங்களாக இவர்களுக்கும் ஹேமா விற்கும் தொடர்பு இல்லை. தற்போது ஹேமாவின் பேஸ்புக் கணக்கை சிலர் கண்டுபிடித்து ஹேமாவிற்கு பேஸ்புக் மூலமாக ஆபாச படங்கள் அனுப்பி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து ஹேமாவின் தந்தை நெல்லிக்குப்பம் பொலிஸில் முறைபாடு செய்தார். அதில் தன் மகளின் கையடக்கத்தொலைபேசிக்கு இனந்தெரியாதவர்கள் ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டி வருவதாக கூறியிருந்தார்.இதையொட்டி நெல்லி குப்பம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகிய இருவரும் பேஸ்புக்கில் ஆபாச படங்களை ஹேமாவுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையொட்டி நெல்லிக் குப்பம் பொலிஸ் அதிகாரி ராமநாதன் தலைமையில் தனிப்படை பொலிஸார் தூத்துக்குடிக்கு விரைந்தனர். அங்கு ஹரிகரன், பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் கடலூர்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். அவர்களை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து இவர்கள் இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஹரிகரன் பொறியியல் பட்டதாரி. தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன்காலனியை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பிரபாகரனும் அதே பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் தூத்துக் குடியில் கூலிவேலை செய்து வந்தார்.

மேலும் ஆபாச படம் அனுப்ப துணையாக இருந்ததாக சென்னையை சேர்ந்த காவியா, ராம்பிரபு தூத்துக் குடியை சேர்ந்த சேகர், ஷியாம் பென்னி, எறல், சிவகாசியை சேர்ந்த முரளி, பாலா ஆகிய 7 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.