இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'சூரரை போற்று' படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் 'வாடிவாசல்'. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மையப்படுத்தி தயாரகும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். 

இதில் சூர்யாவிற்கு இரண்டு வேடங்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

'அசுரன்' படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை தயாரித்த வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது ரசிகர்களுக்காக 'வாடிவாசல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் சூர்யாவின் ரசிகர்கள், இணையத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள்.