பாலிவுட் நடிகர் அமீர்கான் மும்பையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாடிய போது, 

ஊடகவியலாளர் ஒருவர் வளர்ந்து வரும் தீவிரவாதத்தை பற்றி கேள்வி எழுப்ப,

அமீர்கான் அதற்கு பதில் அளிக்கையில், ”மதத்தின் பெயரால் எவரெல்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறார்களோ, உண்மையில் அவர்கள் தங்களின் மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அனைத்து மதங்களும் அன்பையும், அமைதியை மட்டுமே போதிக்கிறதே தவிர, வன்மத்தை போதிப்பதில்லை”  என்று அமீர்கான் கூறியுள்ளார்.