பிரிட்டன் மூன்று மில்லியன் ஹொங்கொங் மக்களுக்கு குடியுரிமையை வழங்குவதற்கான தனது திட்டத்தின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் இந்த தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, உள் விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதுடன் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரதி படேல் புதன்கிழமை இடம்பெற்ற ஒரு மாநாட்டில், தேசிய வெளிநாட்டு விசாக்கள் கொண்ட ஹொங்கொங் மக்கள் 2021 ஜனவரி முதல் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று கூறினார்.

ஏறக்குறைய மூன்று மில்லியன் ஹாங்காங் குடியிருப்பாளர்களை பிரிட்டனில் குடியேற அனுமதிக்கும் பிரிட்டனின்முடிவு, முன்னாள் பிரிட்டிஷ் காலனி மீது பீஜிங் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், 1997 ஆம் ஆண்டில் சீன ஆட்சிக்கு திரும்பியபோது வாக்குறுதியளிக்கப்பட்ட சுதந்திரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமைந்துள்ளதாக ஜனநாயக ஆர்வலர்கள் கூறினர்.

எனினும் 1984 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இந்த சட்டம் மீறுவதாக பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை இயக்கியது.

இந்த புதிய சட்டம் ஹாங்காங் நீதியமைப்பின் சுயேச்சை அதிகாரத்தை பெரிதும் பாதிக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதன்மூலம் ஜனநாயத்துக்கு ஆதரவாக போராடக் கூடியவர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த ஹொங்கொங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.