அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான  நாசாவின் கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூக வளைதளங்களைக் கடந்த 6-ஆம் திகதி   'r4die2oz' என்று பெயர் செய்யப்பட்டு அதில்,  உள்ள அடையாள படத்தையும் ஒரு பெண் புகைப்படத்திற்கு மாற்றியுள்ளனர்.  ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டதோடு,  டுவிட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்துள்ளனர். 

நாசாவின் டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென ஆபாச புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து யாரோ ஹேக் செய்து இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. 

உலகின் முதல் தர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக்குள்ளேயே ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளது நாசா அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இந்த புகைப்படங்களை உடனடியாக நாசா நீக்கிவிட்டது.