புத்தளம் பகுதியில் 200 கிரேம் ஐஸ் போதைப்பொருளுடன் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சுமார் 600,000 ஆகும். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் கலால் திணைக்கள அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் அஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.