இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு வருடத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தடையானது ஒழுக்க மீறல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கித்ருவானுக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடையானது, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்தது.