பெண்களைவிட ஆண்களை அதிகளவில் பாதிக்கும் உடற்பருமன்

Published By: Digital Desk 4

22 Jul, 2020 | 07:41 PM
image

உடற்பருமனுக்காக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைக்குப் பின்னரான பக்க விளைவுகள், பெண்களைவிட ஆண்களுக்கே அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இன்றைய திகதியில் வேகமான வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்மில் பலரும் தங்களது உணவு முறை பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமானவர்கள் உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்த அளவை விட கூடுதலான உடல் எடையுடன் இருக்கிறார்கள். 

இந்த கொரோனா காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், அவர்கள் கூடுதலாக உணவருந்தி, உடல் எடையை பராமரிக்க இயலாமல், உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

உடல் பருமனைக் குறைப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி க்கு பின்னரும், உடல் எடை குறையாதவர்களுக்கு பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்க படுகிறார்கள். பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு sleeve gastrectomy மற்றும் laparoscopic gastric bypass ஆகிய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்கிறார்கள்.

இத்தகைய சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்களில் பலருக்கும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான பக்கவிளைவுகளை குறைப்பதற்கான சிகிச்சைகளையும், மருத்துவரின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை மேற்கொள்வார்கள். இதன்போது அண்மைய ஆய்வின்படி பெண்களைவிட ஆண்கள் கூடுதலாக 20 சதவீத அளவிற்கு பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனால் உடல் பருமனுக்கான பிரத்யேக பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள்பக்கவிளைவு தொடர்பான மருத்துவர்கள் கூறும் அறிவுரையை உறுதியாக பின்பற்ற வேண்டும். சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதனை அலட்சியப்படுத்தினால் மரணம் ஏற்படுவதற்கான அபாயமும் உண்டு என எச்சரிக்கிறார்கள்.

டொக்டர் மாறன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29