பன்னல - ஹாவன்ஹெலிய பகுதியில் தாயும் மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 45 வயதுடைய தாயும் 20 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.