முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பினை நிறைவு செய்த 149 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

எத்தியோப்பியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.