வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 14 மோட்டார் செல்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியிலுள்ள கிணறு ஒன்றை வீட்டின் உரிமையாளர் துப்புரவு செய்துள்ளார்.

இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் ஓமந்தை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் 14 மோட்டார் செல்களை அகற்றி செயலிழக்கச்செய்துள்ளனர்.