பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதினின் வழக்கு தொடர்பில்,  கொழும்பு குற்ற பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டீ.ஆர்.எல்.ரணவீரவும் தொடர்புப்பட்டிருக்கலாமென்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது இதனை  நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வழக்கு தொடர்பிலான சிசிடிவி காணொளிகள் கனடாவில் உள்ள நிறுவனமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்று மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.