வவுனியா நகர்ப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் சுகாதாரத்திணைக்கள பூச்சியலாளர்கள் ஆய்வுக்குழுவின் உத்தியோகத்தர்களினால் வீட்டுக்கிணறுகளில் டெங்கு நுளம்பு பெருக்கப்பரிசோதனைகள் மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது .

கொரோனா நோய் தொற்று காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகளின் நடவடிக்கைகளில் டெங்கு மலேரியா நுளம்பின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வுகள் அற்று செல்வதையும் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை வவுனியா நகர எல்லைப்பகுதிகளிலுள்ள வேப்பங்குளம் , குருமன்காடு , பூந்தோட்டம் , வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பூச்சியலாளர்களின் ஆய்வுக்குழு மூன்று குழுக்கள் இணைந்து வவுனியா ககாதாத்திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கிணறுகளில் அண்மைக்காலங்களில் விடப்பட்டு மீன்களின் பெருக்கம் அதனுடன் இணைந்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இணங்காணுதல் கிணறுகளில் நுளம்பு டெங்கு நுளம்பின் பெருக்கம் போன்ற பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்

சில கிணறுகளில் விடப்பட்ட மீன்குஞ்சுகள் கிணறு சுத்திகரிப்பு கிணறு இறைப்பு கிணறுகளுக்கு குளோரின் பயன்படுத்தல் போன்ற நடவடிக்கையினால் முற்றாக நுளம்பு குடம்பிகளை கட்டுப்படுத்தி குடம்பிகளை உண்ணும் கப்பி மீன்குஞ்சுகள் அழிந்து போயுள்ளதையடுத்தும் நுளம்பு பெருகும் இடங்களை இணம்காணுதல் போன்ற செயற்பாடுகளையும் மலேரியா தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் . 

எனவே இவர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களையும் ஆதரவினையும் பொதுமக்கள் வழங்கி டெங்கு நுளம்பு மலேரியா பெருக்கத்தைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தியோகத்தர்கள் கோருகின்றனர் .