நடிகர் சந்தானம் நடித்து வரும் 'பிஸ்கோத்' என்ற படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜசிம்ஹா அரசனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

'டகால்டி' என்ற படத்தைத் தொடர்ந்து கொமடி நாயகன் சந்தானம் பிஸ்கோத் மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் 'பிஸ்கோத்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் சந்தானத்துடன் நடிகைகள்  தாரா அலிஷா பெர்ரி  மற்றும் கன்னட நடிகை சுவாதி முப்பாலா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கிறார்கள். 

இவர்களுடன் மூத்த நடிகை சௌகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ரதன் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' இந்தப்படத்தில் நடிகர் சந்தானம் பிஸ்கற்று தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் சாதாரண ஊழியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜசிம்ஹா என்ற மன்னன் வேடத்திலும் நடிக்கிறார். 30 நிமிடங்களுக்கு மேலாக வரும் இந்த காட்சிக்காக பிரத்யேக அரங்குகளை கலை இயக்குனர் ராஜாகுமார் உருவாக்க, அந்தக் காட்சிகளுக்கான பிரத்யேக உடையை ஆடை வடிவமைப்பாளர் பிரியா வடிவமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது கலைஞர்கள் பின்னணி பேசிவருகிறார்கள். 

நடிகர் சந்தானம் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான பின்னணி பேசுவதை நிறைவு செய்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜானரில் தயாராக இருக்கும் இந்த திரைப்படம், தற்போது கொரோனா காரணமாக மன அழுத்தத்தில் தவிக்கும் மக்களுக்கு, அதிலிருந்து வெளியே வருவதற்கான சிறந்த மாற்றாக இருக்கும்.' என்றார்.

சந்தானத்தின் ராஜசிம்ஹா இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.