குருணாகலில் அமைக்கப்பட்டிருந்த புவனேகபாகு மன்னனுடைய அரச சபை உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிப்டன் சுற்று வட்டாரத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


அவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க , ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு குறித்த இடத்திற்கு பொலிஸார்  வருகை தந்திருந்தமையையும் குறிப்பிடதக்கது.