DIMO - மொரட்டுவை பல்கலைக்கழகம் இணைந்து Formula Student 2016 பந்தையக் காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளன

Published By: Priyatharshan

07 Jul, 2016 | 04:42 PM
image

இலங்கையிலுள்ள ஒரு முன்னணி வாகன விற்பனை நிறுவனமான Diesel & Motor Engineering PLC (DIMO), மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் பீடத்தின் மாணவர்களுடன் இணைந்து மாணவர்களுக்காக உலகில் இடம்பெறுகின்ற மிகப் பாரிய மோட்டார் விளையாட்டுப் போட்டியான “Formula Student 2016” நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பங்குபற்றுவதற்காக வடிவமைத்துள்ள D-Mora P1 என்ற பந்தயக்காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Formula பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவைச் சுமக்கின்ற எந்தவொரு பந்தய வீரருக்கும் அல்லது வார இறுதியில் பந்தயத்திடலில் பந்தயத்தில் ஈடுபட விரும்புகின்ற எந்தவொரு ஆர்வலருக்கும் மிகவும் நியாயமான விலையில் மிகப் பொருத்தமான தெரிவாக அமையும் வகையில் D-MORA P1வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. 

வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள D-MORA P1 கார்,  600cc 4 சிலின்டர்களுடனான Honda CBR இயந்திரத்தின் வலுவுடன் 70 bhp(மட்டுப்படுத்தப்பட்ட) வலுவை வழங்குவதுடன் 300 கிலோ எடையுடன் (80 கிலோ எடை கொண்ட சாரதி மற்றும் எரிபொருள் அடங்கலாக) மிகக் குறுகிய நேரத்தில் 0 இலிருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர் என்ற வேகத்தை இலாவகமாக எட்டு மணிக்கு 140 கிலோ மீற்றருக்கும் அதிகமான வேகத்தில் (மட்டுப்படுத்தப்பட்ட) பறக்கும் வல்லமை கொண்டது. 

வாகனம் செலுத்தும் ஸ்டியரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள,பெயர்ச்சி வசதி தொழில்நுட்பம், புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கும், தொழில்சார்ரீதியாக இத்துறையில் உள்ளவர்களுக்கும் மறக்கமுடியாத Formula கார் அனுபவத்தை வழங்குகின்றது. உருக்கு குழாய் இடைவெளிச் சட்டத்துடனான அடிச்சட்டம் மற்றும் முன்புறம் மற்றும் பின்புறத்திலுள்ள சமமற்ற A-arm இடைநிறுத்தி ஆகியன வாடிக்கையாளர்களுக்கு நியாயமான செலவில் பந்தயக் காருக்கான தீர்வைத் தருவதுடன் அவர்கள் தொழில்சார்ரீதியாக இத்துறையில் கால்பதிக்க முன்னர் தேவையான திறமைகளை இதன் மூலமாக வளர்த்துக்கொள்ள முடியும்.

Formula Student 2016 போட்டியானது 2016 ஜுலை 14 முதல் 17 வரை ஐக்கிய இராச்சியத்திலுள்ள Silverstone Circuit பந்தயத் திடலில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் 30 நாடுகளிலிருந்து 130 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் 5,000 விருந்தினர்கள் மற்றும் 250 தொழில்ரீதியாக இத்துறை சார்ந்தவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இயந்திரவியல் பொறியியல் கற்கை நிலையத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற, Formula Student போட்டியானது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கல்விசார் மோட்டார் விளையாட்டுப் போட்டியாக இது அமைந்துள்ளதுடன் தொழிற்துறை மற்றும் பிரபல பொறியியலாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் நிலையான மற்றும் வலுவான நிகழ்வுகளில் போட்டியிடுவதற்கு ஒரு வருடத்தில் தனி ஆசனத்தைக் கொண்ட பந்தயக் கார் ஒன்றை வடிவமைத்து கட்டியெழுப்புமாறு சவால் விடுவதுடன், பந்தயக் காரின் சோதனை ஓட்டங்கள் மற்றும் தொழிற்படுதிறனை தெளிவாக விளங்கி அவற்றை வெளிக்காண்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 

Formula Student போட்டியில் பங்குபற்றிய டசின் கணக்கான முன்னாள் மாணவர்கள் Formula 1 போட்டி மட்டத்திற்கு செல்லுமளவிற்கு தமது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போட்டியாளர்கள் உலகிலுள்ள மிகப் பாரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்காலத்திற்கு உகந்த கார்களை வடிவமைத்து வெளிக்கொண்டு வரும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் உலகெங்கிலுமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு 156 அணிகள் வெற்றிகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் மோட்டார் விளையாட்டுத் துறையின் தாயகம் என்று பிரபலமாக அறியப்படுகின்ற Silverstone Circuit பந்தயத் திடலில் அவர்கள் போட்டியிடவுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் TeamSHARK அணியே Formula Student போட்டியில் இலங்கையிலிருந்து முதன்முதலாக கலந்துகொள்ளும் அணியாகத் திகழ்வதுடன் இதற்கான பூரண அனுசரணையை DIMO வழங்குகின்றது. காரை வடிவமைப்பதற்குத் தேவையான நிதியியல் ரீதியான உதவிகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளதுடன் போட்டியிடும் அணி ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் பொறுப்பேற்றுள்ளது. மேலும் TeamSHARK அணிக்கு நிபுணத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்கியுள்ளதுடன், காரை வடிவமைக்கும் போது சியம்பலாபே என்ற இடத்திலுள்ள DIMO இன் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள வசதிகள் அனைத்தையும் உபயோகிக்கும் வாய்ப்பையும் வழங்கியிருந்தது.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே நிகழ்வில் குழுமியிருந்தோர் முன்னிலையில் உரையாற்றுகையில்,

“DIMO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு மட்டுமன்றி அனைத்து இலங்கை மக்களும் பெருமைப்படவேண்டிய ஒரு தருணமாக இது உள்ளது. பெருமதிப்புமிக்க சர்வதேச போட்டியில் இலங்கை அணியொன்று முதற்தடவையாக பங்குபற்றும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. 

TeamSHARK மற்றும் வியத்தகு வடிவமைப்பான D-Mora P1 பந்தயக் கார் ஆகிய இரண்டிற்கும் மிகச் சிறப்பான பெறுபேறுகளை அடைவதற்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த பொறியியலாளர்களின் திறமைகளை முழு உலகிற்கும் எடுத்துக் காட்டும் முயற்சியில் வெற்றி பெறவும் வாழ்த்துகின்றோம்.”

Team Shark Formula Student செயற்திட்டத்திற்குப் பொறுப்பான விரிவுரையாளரான திரு. சசிரங்க டி சில்வா குறிப்பிடுகையில்,

“நாட்டில் பொறியியல் மற்றும் பிரதான தொழில்நுட்ப அறிவியல் மையங்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற மொரட்டுவை பல்கலைக்கழகம் தொழில்நுட்ப துறைகளில் திறமையாளர்களை உற்பத்தி செய்துவருகின்றது. 

DIMO PLC மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் பீடத்தின் பட்டதாரி மாணவர்களுக்கிடையிலான பயனுள்ள பங்குடமையே இச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியுள்ளதுடன் இயந்திரவியல் பொறியியல் துறையிலுள்ள திறமைமிக்க மாணவர்கள் தமது பெருமுயற்சியை எதிர்காலத்தில் தொழில்சார்ரீதியான வாழ்வில் சரியாக உபயோகப்படுத்தி மிகவும் திறமைசாலிகளாக மாறுவதற்கும் வழிகோலியுள்ளது.”

DIMO நிறுவனத்தின் பணிப்பாளரான விஜித பண்டார கூறுகையில்,

“நாம் ஒரு சிறிய நாடாக இருக்கின்ற போதிலும் விளையாட்டு, விஞ்ஞானம், பொறியியல் அல்லது வேறு எந்தவொரு துறையிலும் உலகத்தரம் வாய்ந்த தனிநபர்களை இலங்கை எப்போதும் உருவாக்கி வந்துள்ளது. பொறுப்புள்ள ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், இந்த திறமைசாலிகளான பொறியியல் மாணவர்களுக்கு உதவி, உலகிலுள்ள ஏனைய திறமைசாலிகளுடன் போட்டியிடுவதற்கு அவர்கள் தமது காரை வடிவமைப்பதற்கு உதவ வேண்டியது எமது கடமையென DIMO நிறுவனம் உணர்ந்துள்ளதுடன், சர்வதேச அரங்கில் அவர்கள் தமது முத்திரையைப் பொறித்து, எமது தேசத்திற்கு பெருமையைத் தேடித் தருவதற்கு உதவ வேண்டியதும் எமது கடமையாகும்.” இந்த அணிக்கு DIMO தொழிற்சாலை வளாகத்தில் இரவு பகலாக கடின உழைப்புடன் இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு வகுப்பறைகள், நவீன உபகரணம் மற்றும் இயந்திரம் அடங்கலாக நிறுவனங்களின் வளங்கள் அனைத்தையும் எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

இச்செயற்திட்டத்தின் பொறுப்பாளரான ஹர்ஷன கலஷா இச்செயற்திட்டம் தொடர்பாக கூறும்போது,

“மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் எமக்கு எமது கல்விப்பளுவிற்கு மத்தியிலும், Formula கார் ஒன்றை வடிவமைத்து, உலகில் முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழங்களுடன் போட்டியிடுவதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு எடுத்துச் செல்வதில் எவ்விதமான சிரமங்களும் இருக்கவில்லை. நான் இத்திட்டத்தின் பொறுப்பாளராக இருக்கின்ற போதிலும் இந்த வெற்றிக்கு பின்னால் பலர் உள்ளனர். எத்தனையோ பேரின் ஓயாத அர்ப்பணிப்பே இதனை சாத்தியமாக்கியதுடன் எனது அணி இதில் பெரும்பங்காற்றியுள்ளது. இக்காரை ஆரம்பத்திலிருந்து முற்றுமுழுதாக வடிவமைப்பதற்கு அவர்கள் இரவு, பகல் பாராது ஓயாது உழைத்துள்ளனர். 

இயந்திரவியல் பொறியியல் பீடத்தின் கல்விசார் மற்றும் கல்வி சாரா பணியாளர்கள் எமக்கு வழங்கிய வழிகாட்டல் மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் DIMO வழங்கிய நிதியியல், முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவே இச்செயற்திட்டத்தின் முக்கிய தூணாக அமைந்துள்ளது.”

MERCEDES AMG PETRONAS Formula One அணியின் முன்னாள் அணி முதல்வரான றோஸ் பிறோன் Formula Student 2016 போட்டிக்கு ஆதரவு வழங்க மீளவும் இணைந்துள்ளார். 

அவர் ஆரம்ப வைபவத்தில் மாணவர்களை நேரடியாகச் சந்திக்கவுள்ளார். Mercedes AMG Petronas F1 இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளரான (தொழில்நுட்பவியல்) பெடி லோ Sauber F1 இன் காற்றியக்கவியல் துறையின் முன்னாள் பணிப்பாளரான வில்லெம் ரொயட், முன்னாள் Formula 1 பந்தய வீரரான டேவிட் பிரபாம் மற்றும் பிபிசி அலைவரிசையின் விஞ்ஞானத் துறை நிகழ்ச்சித் தொகுப்பாளரான டலஸ் கம்பெல் ஆகியோர் இந்த ஆண்டு போட்டியின் நல்லெண்ணத் தூதுவர்களாக செயற்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03