தபால் மூல வாக்களிப்பிற்கு மேலும் இரண்டு நாள் கால அவகாசம்

Published By: Vishnu

22 Jul, 2020 | 12:35 PM
image

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றும், நேற்று முன்தினமும் தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்க முடியாமல் போன வாக்காளர்கள் வெள்ளிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரையிலும், சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரையிலும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுப் பொதிகள் தமது பொறுப்பில் உள்ள தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் கூடிய விரைவில் அவற்றை உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் ஒப்படைப்பது அவசியமாகும் என்று நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக மூடுவதற்கு விசேட வேலைத்திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதுடன், கட்சிப் பிரதிநிதிகள் இரவு நேரத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களில் தங்கியிருக்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் தெரிவித்தார்.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-16 11:48:07
news-image

விபத்துக்குள்ளான அசோக ரன்வலவின் வாகனத்தில் தொழில்நுட்ப...

2025-12-16 11:23:20
news-image

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;...

2025-12-16 12:12:28
news-image

நூற்றாண்டை கடக்கும் இலங்கை வானொலி!

2025-12-16 12:01:45
news-image

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில்...

2025-12-16 10:51:36
news-image

கம்பளை அம்புலுவா உயிரியல் பல்வகைமை வலயத்தின்...

2025-12-16 11:49:58
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட...

2025-12-16 11:49:18
news-image

மூங்கிலாறில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: கணவன்–மனைவி...

2025-12-16 11:46:36
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 12:10:30
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43