(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள கொள்கை பிரகடனத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள கொள்கை பிரகடனத்திற்கும் இடையில் வேறுப்பாடுகள் கிடையாது. ஒற்றுமையே காணப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தியதை போன்று சஜித் நாட்டை பிளவுப்படுத்தவும் முன்நிற்பார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி நகரில் நேற்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பலம் வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த முன்னின்று செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தவும் முன்னின்று செயற்படுவார். தந்தையின் ஆட்சி காலத்தை மீண்டும் உருவாக்குவதாக குறிப்பிடும் சஜித் பிரேமதாஸ 88 மற்றும் 89ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த கொடிய சூழலை மறந்து விட கூடாது.
பிரேமதாஸவின் ஆட்சி காலத்தில் கலவரங்கள் கட்டவிழ்க்கப்பட்டன. பலர் படுகொலை செய்யபபட்டார்கள். அதிகாரத்தை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினார்கள். இதனை மலையக மக்கள் குறிப்பாக கண்டிவாழ் மக்கள் மறக்கவில்லை. சுமார் 60ஆயிரம் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1988ம் ஆண்டு பேராதொனிய பல்கலைக்கழகத்தின் 22 மருத்துவ பீட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டி நகரில் மாத்திரம் 157 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் இதில் 129 பேர் பிரேமதாஸவின் அரசாங்கத்தினாலும், மிகுதி 28 பேர் மக்கள் விடுதலை முன்னணியினராலும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1989ம் ஆண்டு ஆகஷ்ட் மாதம் பிரேமதாஸ அரசாங்கத்தில் கண்டி டி.எஸ். சேனாநாயக்க மாவத்தையில் பழைய மாத்தளை வீதியில் பல இளைஞர்கள் எறித்து படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலக்கட்டத்தில் கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் சித்திரைவதை முகாம்கள் இருந்ததை ஒருபோதும் மறக்க முடியாது. பேராதொனிய பாலத்தில் இருந்து 200ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து சுட்டு ஆற்றில் வீழ்த்தப்பட்டார்கள்.
கடுகஸ்தோட்டை பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டு எறிக்கப்பட்ட 14 மற்றும்15 வயதுக்கு இடைப்பட்ட சிறுமியின் அஷ்த்தி (சாமபல்) பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. அன்றைய அரசாங்கம் அஷ்தி பாராளுமன்றத்துக்கு எவ்வாறு வந்தது என்று ஆராய்ந்தார்களே தவிர அந்த சிறுமி எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் மீண்டும் பிரேமதாஸவின் யுகத்தை தோற்றுவிக்க மக்கள் அச்சம் கொள்வார்கள். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM