கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரும் ரீட் மனு நிராகரிப்பு

22 Jul, 2020 | 09:48 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைதுசெய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்காமலே நிராகரித்தது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண  தாக்கல் செய்த ரீட் மனுவே இவ்வாறு பிரதிவாதிகளுக்கு அரிவித்தல் கூட அனுப்பப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இம்மனுவை ஏகமனதாக நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக  ஓர் இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட  ஆபத்தானவர் என கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டத்தரணி ஜலித் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக கருணா அம்மானும், சட்ட மா அதிபரும், பதில் பொலிஸ் மா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அந்தக் கருத்தின் மூலம் அவர் சமூகக் கொலைக்குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கருத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள்  கட்டளைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், பயங்கரவாத தடை சட்டம் , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு  சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கருணாவின் கருத்துக்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈட்டையும் தமக்கு பெற்றுத் தருமாறு குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48