மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து நபர்களையும்  நாளை  புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்தார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின்மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில், அவ் வீட்டின் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செபமாலை சந்தியோகு (வயது 56)  என்பவர் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐந்து நபர்கள் சந்தேக நபர்கள் மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இச் சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஐர்படுத்தியபோது அவர்களை  நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

காயப்பட்ட குடும்பஸ்தரின் மகனுக்கும் சந்தேக நபர்களுக்குமிடையே இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்தே குறித்த குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் ஆரம்ப பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.