நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'டைரி' என பெயரிடப்பட்டிருக்கிறது.
'வம்சம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனான இவர், 'மௌனகுரு' என்ற படத்தின் மூலம் வணிக ரீதியான வெற்றியை கொடுத்து, முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இணைந்தார். அதன்பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தெரிவு செய்து நடித்துவருகிறார். இவர் தற்போது 'களத்தில் சந்திப்போம்' என்ற படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஜூலை இருபத்தியோராம் திகதியான இன்று 34 வது பிறந்தநாள் காணும் இவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'டைரி' என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, 'அர்ஜுன் ரெட்டி' பட புகழ் இசை அமைப்பாளர் ரதன் யோகன் இசை அமைக்கிறார் . இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இணையத்தில் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக தயாரிப்பாளர் அரவிந்த் சிங் தயாரிப்பில், எரும சாணி புகழ் விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார். அதற்கான பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகியிருக்கிறது.
பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கும் நடிகர் அருள்நிதியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM