சுற்றுலா பயணிகள் விசாவில் வந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் தாங்கிருந்த இந்திய நாட்டை சேர்ந்த சோதிடர்கள் இருவர் நேற்று ஹட்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் டொஸ்க்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து குறித்த இருவரையும் எதிர்வரும்  23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் ஹட்டன் நகரின் பஸ் தரிப்பிட பகுதியில் வியாபார ஸ்தலம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ஜோதிட நிலையம் வைத்திருந்ததாகவும் அவர்களின் விசா முடிவுற்றபோதும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமையினால் அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.