நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் ஹக்கலை பகுதியில் கனரக கொள்கலன் வாகனமொன்று வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தினால் வீடொன்றுக்கும் மின் கம்பத்திற்கும் சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் தூக்க மயக்கமே விபத்திற்கான காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 

குறித்த விபத்து தொடர்பில் ஹக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.