புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் : வாசுதேவ

Published By: R. Kalaichelvan

21 Jul, 2020 | 05:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)  

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள்  மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்ததை  இரத்து செய்தால்  பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் . ஆகவே 13வது திருத்தம் ஒருபோதும் இரத்து செய்யப்படமாட்டாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருமித்த  நாட்டுக்குள்  13 வது அரசியலமைப்பின் திருத்தம் ஊடாக அதிகார பகிர்வை வழங்குவதாக  கொள்கை  பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள  கூடியது.

தமிழ் மக்களுக்கு  அரசியலமைப்பின்  பிரகாரம் தீர்வு வழங்கப்பட வேண்டும். அத்தீர்வு  ஒருமித்த நாட்டுக்குள் முரண்படாத விதத்தில் அமைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இதில் எக்காலத்திலும், எக்காரணிகளுக்காவும் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலுக்கான கொள்கை  பிரகடனத்தை இம்முறை  வெளியிடவில்லை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிட்ட சுபீட்சமான எதிர்காலத்திற்கான கொள்கையை 52.25  சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நிறைவுப் பெற்ற  8 மாத காலத்தில் இந்த ஆதரவு  சதவீதம் உயர்வடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

ஜனாதிபதியின் கொள்கை  திட்டங்களை புதிய அரசாங்கத்தில் முழுமையாக செயற்படுத்த ஆளும் தரப்பில் கூட்டணியமைத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இவ்வாறான  நிலையில் பொதுத்தேர்தலுக்கான  பொதுஜன பெரமுன தனித்து கொள்கை  திட்டத்தை தயாரித்தால் நிறைவேற்றுத்துறைக்கும், சட்டத்துறைக்கும் இடையில் வீண் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  முன்வைத்த  கொள்கை  திட்டம் ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும்  வரையறுத்ததாக அமைய வில்லை. இலங்கை பிரஜைகளின் அபிவிருத்தி முன்னேற்றம், மற்றும் நாட்டின் அபிவிருத்தி என்பதை உள்ளடக்கியுள்ளது. ஆகவே இதில்  சகோதர  இனத்தவர்களும் உள்ளடங்குவார்கள்.  அரசியலமைப்பின் 13வது திருத்த்ததை  இல்லாதொழிப்பதாக   ஆளும்  தரப்பின் அரசியல்வாதிகள்  பிரபல்யமாகுவதற்கு குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை  இரத்து செய்தால்  பலவீனமாக அரச  நிர்வாகம் தோற்றம் பெரும். இனப்பிரச்சினைக்கு தீர்வாக இரு    நாடுகளை உள்ளடக்கி செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தோற்றம் பெற்ற மாகாணசபை முறைமையினை  எவ்வாறு இரத்து செய்ய முடியாது. இதுவரை காலமும் அது எவராலும் இயலாத ஒரு   காரியமாகவே உள்ளது. இனியும்  அவ்வாறே இருக்கும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான  புதிய  அரசாங்கத்தில்  ஒருமித்த நாட்டுக்குள்  முரண்பாடற்ற வித்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். புதிய அரசாங்கத்தில் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது.  அபிவிருத்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53