உல­கக்­கல்­விக்கு பெற்றோர் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை தங்கள் குழந்­தை­களின் ஆன்­மிக கல்­விக்கு பெற்றோர் வழங்க மறந்து விடு­கின்­றனர்.

பாட­சா­லை­களில் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு மாண­வர்கள் தயார்­ப­டுத்­தப்­படும் அக்­க­றையை அற­நெ­றிக்­கல்­விக்கு பெற்றோர் காட்­டு­வ­தில்லை. இதனால் மாண­வரின் ஆன்­மிக கல்வி இன்று சவா­லாக மாறி­யுள்­ளது என இஸ்ரா பாலர் ­பா­ட­சா­லையின் கல்குடா பிராந்­திய செயற்­பாட்­டாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றியாஸ் (நளீமி) தெரி­வித்தார்.

வாழைச்­சே­னையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட இஸ்ரா பாலர் பாட­சா­லையின் பெற்­றோ­ருக்­காக ஒழுங்கு செய்­யப்­பட்ட கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,எமது ஓட்­ட­மா­வடி,வாழைச்­சேனை பிர­தே­சங்­களில் அதி­க­மான மாண­வர்கள் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து கோட்­டத்­திற் கும், வல­யத்­திற்கும் பெருமை சேர்த்து வரு­கின்­றனர். இவ்­வாறு சித்­தி­ய­டையும் மாண­வர்­களின் கடந்த கால வாழ்வை பின்­னோக்கி பார்த்தால் அவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­படும் நிலை­மைகள் குறைந்­து­ செல்­கின்­றன. உல­கக்­கல்­வி­யாலும் பிர­யோ­சனம் இல்­லாமல் அதே­வேளை மார்க்­கக்­கல்­வி­யையும் தொலைத்­த­வர்­க­ளாக மாண­வர்கள் அலைந்து திரி­கின்­றனர். மாண­வர்கள் இவ்­வாறு பாட­சா­லை­களில் 4ஆம் தரத்­திற்கு வரும்­போதே புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு தயார்­ப­டுத்தி விடு­வ­தனால் ஆர ம்­பக்­கல்­வியில் கிடைக்­க­வேண்­டிய முழு­மை­யான ஆன்­மிக கல்வி குழந்­தை­க­ளுக்கு இல்­லாமல் செய்­யப்­ப­டு­கின்­றது.

எமது முன்­னோர்கள் குர்­ஆனை மாத்­தி ரம் ஓதத்­தெ­ரிந்தால் போதும் என்றே எதிர்­பார்த்­தனர்.அந்­தக்­கா­லத்­திற்கு அந்தக் கற்றல் சரி­யா­னதே. ஆனால் இந்தக்காலத்தில் குழந் தையை செயற்பாட்டு இஸ்லாத்துக்குள் அழைப்பதன் மூலமே எதிர்கால உலகில் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் முன் னெடுக்கப்படும் சதிகளிலிருந்து குழந்தை களை காப்பாற்ற முடியும் என்றார்.