அம்பாந்தோட்டை பகுதியில்  கடை உரிமையாளர்கள் பலர் ஒன்றிணைந்து கடையடைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வற் வரிக்கு எதிராக குறித்த கடையடைப்பு ஆர்பாட்டத்தினை கடை உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளன.

கடையடைப்பு நடவடிக்கையால் குறித்த பகுதியின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வற் வரியினை 14 சதவீதமாக உயர்த்திய காரணத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடவத்தை, கிரிபத்கொடை, களனி, பதுளை, பண்டாரவளை, அனுராதபுரம் மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் கடையடைப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.