அணில் ஒன்றுக்கு தாகம் எடுத்த நிலையில், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக கெஞ்சிய காணொளி வைரலாகியுள்ளது.

காணொளியில், ஒரு தனி அணில் சாதாரணமாக ஒரு போத்தலை பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை சுற்றி திரிவதும் , மற்றொரு குழந்தை பார்ப்பதையும் காணலாம்.

தண்ணீர் போத்தல் வைத்திருந்த குழந்தை விலகிச் செல்லும்போது அணில் அவ்வப்போது அதன் பின்னங்கால்களில் நின்று, அதன் முன் பாதங்களை கொண்டு சைகை செய்கிறது.

இந்நிலையில், அதற்கு தாகமாக இருக்கிறது' என்று ஒருவர் கூறுகிறார்.

போத்தலை திறந்த பிறகு, குழந்தை கூறுகிறார், 'நான் அதற்கு எப்படி தண்ணீர் கொடுப்பது?'

காணொளியை படம்பிடிக்கும் நபரிடம் குழந்தை போத்தலை ஒப்படைப்பதாகத் தெரிகிறது, அவர் போத்தலை தரையில் நெருக்கமாக வைத்திருக்கிறார்.

தயங்காமல், அணில் தனது வாயை போத்தலில் வைத்து அசைத்து, போத்தலில் உள்ள தண்ணீர் தீரும் வரை இடைநிறுத்தாமல், தண்ணீரைப் பருகியது. போத்தலில் நீர் முடிந்ததும், அணில் ஓடுகிறது.

காணொளி எப்போது அல்லது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

நகர அணில் மனிதர்களை நெருங்கும் போது அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவை என்று ரெடிட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

''நகர்ப்புற பூங்கா அணில்கள் எல்லா நேரத்திலும் உணவுக்காக பிச்சை எடுக்க மக்களை அணுகுகின்றன,''என்று வைரல் காணொளி தளத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் ரெடிட்டர் ஸ்குரேல்புட் எழுதியுள்ளார்.

 'நகரங்களில் வாழும் விலங்குகள் அவற்றின் காட்டு சகாக்களை விட அதிக நுண்ணறிவைக் கொண்டிருக்கின்றன என்பதைப் படித்தது எனக்கு நினைவிருக்கிறது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

'உண்மையில் சுவாரஸ்யமானது, ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

'இந்த அணில் மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியைக் கற்றுக் கொண்டது. அழகான, அழகான அழகான அணில் . ' என மேலும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணொளி; https://videos.dailymail.co.uk/video/mol/2020/07/17/2094654087138688858/640x360_MP4_2094654087138688858.mp4