ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒரு பாரிய கொரோனா வைரஸ் பொருளாதார மீட்புப் பணிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் 750 மில்லியன் யூரோ (858 பில்லியன் அமெரிக்க டொலர்) க்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ் மைக்கேல் " டீல் " என பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் இதை, "ஐரோப்பாவின் வரலாற்று நாள்" என்று பாராட்டினார்.

வைரஸால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ பயன்படும் இந்த தொகை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு ஒப்பந்தத்துடன் வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்ஸல்ஸில் ஆரம்பித்த இந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, 2000 ஆம் ஆண்டு பிரான்ஸ் நகரமான நைஸில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மிக நீண்ட ஐரோப்பிய உச்சி மாநாடாக மாறியது. இது ஐந்து நாட்கள் நீடித்தது.