அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரே நாளில் 11,800 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் கவுன்டி புள்ளிவபரங்கள் தெரிவித்துள்ளன.

கலிபோர்னியா ஒரு நாடாக இருந்தால், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பின்னால் மொத்தம் 400,000 தொற்றாளர்களை கொண்டு இது ஐந்தாவது இடத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14 ஆம் திகதி 10,861 தொற்றார்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கலிபோர்னியா 10,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்தது இதுவே முதல் முறையாகும்.

புளோரிடா கடந்த ஆறு நாட்களில் தொடர்ச்சியாக 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களையும், டெக்சாஸ் கடந்த ஏழு நாட்களில் ஐந்து நாட்கள் 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களையும் பதிவு செய்துள்ளது.

கலிபோர்னியாவில் தினசரி அதிகரிப்பு ஏற்கனவே எந்தவொரு ஐரோப்பிய நாட்டுகளில் ஏற்பட்ட தொற்றுநோய்களின் அதிகரிப்பின்  போது அறிவிக்கப்பட்ட மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மிகப்பெரியளவில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. அங்கு திங்களன்று கிட்டத்தட்ட 160,000 தொற்றாளர்களை கொண்டுள்ளது.

வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன. லொஸ்ஏஞ்சல்சில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் தொடர்ச்சியான எண்ணிக்கையை  நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக அறிவித்துள்ளது.

தொற்றுநோயை எதிர்த்து போராட, கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மீண்டும் கலிபோர்னியாவை முடக்கவுள்ளார். 

மதுக்கடைகளை மூடுவதோடு மட்டுமல்லாமல், உணவகங்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு உட்புற செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டார். உடற்கட்டமைப்பு நிலையம் மற்றும் தேவாலயங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலயைில், கொரோனா  வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க மாநில சிறைச்சாலைகளில் உள்ள 8 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிலிக்கான்வெலி, ஹொலிவூட் திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் அனாஹெய்மில் உள்ள வால்ட் டிஸ்னி கோவின் டிஸ்னிலேண்ட் ரிசோர்ட் ஆகிய இரு தொழில்நுட்ப நிறுவனங்களும் கலிபோர்னியாவில் உள்ளது.

கலிபோர்னியா தீம் பூங்காவை பொழுதுபோக்கு நிறுவனம் மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளது.