லிபியாவுடனான எகிப்தின் எல்லையைப் பாதுகாக்க இராணுவத் தலையீடு தொடர்பில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி அச்சுறுத்தியதையடுத்து எகிப்தின் பாராளுமன்றம் திங்களன்று நாட்டிற்கு வெளியே படையினரை அனுப்ப அங்கீகாரம் அளித்துள்ளது.

எகிப்திய தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காகவும், குற்றவியல் ஆயுதமேந்திய போராளிகள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக எகிப்தின் எல்லைகளுக்கு வெளியே போர் நடவடிக்கைகளில் ஈடுபட எகிப்திய ஆயுதப் படை உறுப்பினர்களை அனுப்புவதற்கு அந் நாட்டு பாராளுமன்றம் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை லிபியாவின் பினாமி போரில் போட்டி தரப்பினரை ஆதரிக்கும் எகிப்து மற்றும் துருக்கியை நேரடி மோதலுக்கு வலிவகுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி எல்-சிசியின் ஆதரவாளர்களால் நிரம்பிய எகிப்தின் பிரதிநிதிகள் சபை, ஒரு மூடிய கதவு அமர்வுக்கு பின்னர் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.